திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி மற்றும் மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகராட்சியாகும். சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா சிறப்பாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70, 574 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சங்கரன்கோவில் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சங்கரன்கோவில் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
சித்திரை பிரமோட்சவம் (48 நாட்கள்) ஒவ்வொரு ஏப்ரல் மாதமும்.
ஆடி தபசு திருவிழா (12 நாட்கள்) ஒவ்வொரு ஆகத்து மாதமும்.
ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா (10 நாட்கள்) ஒவ்வொரு அக்டோபர் மாதமும்
தெப்பத் திருவிழா - தை கடைசி வெள்ளி ஒவ்வொரு பிப்ரவரி மாதமும்.
சங்கரன்கோவில் நகராட்சியானது, தமிழகத்தின் முதல் நிலை நகராட்சியாகும். மற்றும் மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். இந்நகராட்சியானது 2014ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
சங்கரன்கோவில் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்...
செங்கோட்டை 47 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
பாபநாசம் 69.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
திருநெல்வேலி 72.8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது