கொடைகளில் சிறந்தது உயிர்க்காக்கும் குருதி ( இரத்தம் ) கொடையே. அவசரக்காலத்தில் குருதி கொடுத்து அரிய உயிரைக் காப்பது தான் அறத்தின் உச்சம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொடை களத்தில் உள்ளப் பரிவோடு உறுதியாக நிற்கிறார்கள் என்பது தான் கொடையின் உன்னதத்தின் உச்சி.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள். ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே. ஒவ்வொரு நாளும் 38000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை. ஒரு கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம்.
இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.
இரத்த தானம் செய்பவரின் வயது 18-60 குள் இருத்தல் அவசியம். இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
இரத்தம் தேவை படுபவர்கள் கீழ்கண்ட அறக்கட்டளை தொலைபேசியை தொடர்பு கொண்டு அணுகவும்.
இரத்ததானம் செய்ய விரும்புவர்கள் தங்களது பெயர், இரத்தபிரிவு மற்றும் தொலைபேசி எண்ணை கீழே உள்ள பொத்தானை அழுத்தி பதிவு செய்யவும்