சங்கரன்கோவில் நெசவு தொழிலுக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது.

தமிழகத்தில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கைத்தறி நெசவுதான் முக்கிய தொழிலாக விளங்குகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கைத்தறி நெசவுத் தொழில்தான் வாழ்வாதாரம். நெசவு நமது தேசியத்தின் உயிர்நாடி. இதில் சங்கரன்கோவில் நகருக்கு முதன்மை இடம் உண்டு.

தறி ஓடும் ஓசை சங்கரன்கோவில் தெருக்கள் தோறும் கேட்கும்.

”சின்னச் சின்ன இழை பின்னி வருகுது… சித்திரைக் கைத்தறி மின்னி வருகுது... ”. என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கைத்தறி பற்றி பாடலே எழுதி உள்ளார்

சங்கரன்கோவிலில் கைத்தறிகளின் தோற்றமே நெசவுத் தொழிலின் ஆரம்பமாக இருந்தது. ஆரம்ப காலத்தில் சங்கரன்கோவிலில் பல வகை தறிகள் இருந்தன.

சங்கரன்கோவிலில் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் மதிப்பிலான ஆடைகள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.